×

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சொந்த ஊர் செல்ல ஏதுவாக 10,214 பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத் துறை!

சென்னை: மக்களவை தேர்தலை ஒட்டி மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக ஏப்.17, 18-ல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. ஏப்.17, 18-ல் சென்னையில் இருந்து செல்லும் 2,092 பேருந்துகளுடன் 2,970 சிறப்புப் பேருந்துகள் உள்பட 7,154 இயக்கப்படும். ஏப்.17, 18-ல் பிற ஊர்களில் இருந்து 3,060 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 10,214 பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சொந்த ஊர் செல்ல ஏதுவாக 10,214 பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத் துறை! appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,Transport Department ,Chennai ,Lok elections ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தலை பார்க்க 23 நாடு பிரதிநிதிகள் வருகை